முதல் காட்சியில் காதலன் காதலியின் அந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டிலேயே ஒரு விதஎதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டி விடுகிறார் இயக்குனர். அந்த காட்சியை படத்தின் கிளைமாக்ஸ்காட்சியுடன் இணைத்த விதம் அருமை. ஓரளவுக்கு செட்டில் ஆகுமுன்னே அந்த அருமையான பாடலும்அதன் அற்புதமான காட்சி அமைப்பும் நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. ஐ.டி பாணியில்சொல்லவேண்டுமென்றால் " Setting the context right ". பாடலை ரசிக்கும் முன்னே வந்த அந்த திருப்பம்,படத்தில் வர போகும் மற்ற திருப்பங்களின் ஆரம்பம் என்று அப்போது புரியவில்லை எனக்கு...
சில படங்களை கதைக்காக பார்க்கலாம், சிலவற்றை கதாநாயகனுக்காக பார்க்கலாம். ஆனால் இந்தபடத்தை
கதை நடக்கும் களத்திற்காகவே பார்க்கலாம். கதை களம் அத்தனை புதுசு. நாம் பலமுறை சென்று வந்தஇடங்கள் தான் இவை. ஆனாலும் இந்த இடத்தை சுற்றி அவ்வளவாக படங்கள் வந்தது இல்லை. இந்தபடத்தை பார்க்கும் போது இன்னும் திரையில் வராத எத்தனையோ இடங்கள் நம் கண் முன்னே இருப்பதுதெரிகிறது. இந்த இடம் எது என்று உங்களுக்கு இம்மியளவும் சந்தேகம் இருக்க கூடாது என்பதற்காகவேபுன்னகை அரசி இந்த படத்தில் நடித்துள்ளார். இன்னும் சந்தேகம் இருந்தால் "எடுத்துக்கோ எடுத்துக்கோ"மன்னிக்கவும் "அள்ளிக்கோ அள்ளிக்கோ" பாடலை பாருங்கள்.
இந்த கதையில் இடம்பெற்றுள்ள எல்லா கதாபாத்திரங்களுமே நாம் தி நகரில் அவ்வப்போது பார்ப்பவைதான். கழிப்பறையை சுத்தபடுத்தும் ஆணாகட்டும், கண் தெரியாத பாய் ஆகட்டும் இல்லை தனது பிள்ளைகுள்ளமாக பிறந்ததால் வருத்தப்படும் அந்த வியாபாரி ஆகட்டும். ஆனால் இந்த எல்லாருக்குமே ஒருஒற்றுமை. எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் எத்தனை இயலாமைகள் இருந்தாலும் அவர்களும் இந்தஉலகத்தில் வாழத்தான் செய்கிறார்கள். அனைத்து கிளை கதாபாத்திரங்களின் கதையையும்(கதாநாயகியின் தங்கை ஆகட்டும் இல்லை கதாநாயகனின் தோழன் ஆகட்டும்) ஒரு நல்ல இடத்திற்குகொண்டு சென்று ஒரு முடிவை கொடுத்ததற்காக இயக்குனரை பாராட்டியே ஆகா வேண்டும்.
ரசிகர்களுக்கு வர போகும் காட்சி விறுவிறுப்பாக இருக்க வேண்டுமென்று முந்தய காட்சியில் அவர்களைதிசை திருப்புவது ஒரு இயக்குன சூட்சமம். அதை மிக சரியாக இரண்டு இடங்களில் வசந்தபாலன்பயன்படுத்தி உள்ளார். உபயம், காதலிக்கு அளவுகோலில் காதலை சொல்லிய பின் கதாநாயகனுக்கும்அவன் நண்பனுக்கும் நடக்கும் உரையாடலும் அதன் பின்னர் வரும் காட்சிகளும் மற்றும் கடைசிமருத்துவமனை காட்சியில், கதாநாயகனும் பாண்டியும் பேசும் காட்சியும் அதன் பின்னர் கதாநாயகன்எடுக்கும் முடிவும். ஆனாலும் படத்தில் உள்ள துன்பங்களும் துயரங்களும் கொஞ்சம் டூ மச் தான். சரியாக15 அல்லது 20 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சோக சம்பவம் என்பதை பார்க்கும் போது, இது தச்சுட்டுபோட்ட சட்டையா இல்லை போட்டுட்டு தச்ச சட்டையானு ஒரு சந்தேகம் வருது....
கதாநாயகன் கருன்காலியிடம் சொல்லும் ஒரு வசனம் தான் கதையே.
" பெரிய யானை வாழுற இதே உலகத்துல தான் எறும்பும் வாழுது, உன் முன்னாடியே வாழ்ந்து காட்டுறேன்"அப்படி சொல்லி சவால் விடுகிறார் கதாநாயகன். அதன் படி வாழ்ந்தும் காட்டுகிறார். ஒரே ஆண்டில்லட்சாதிபதியாக மாறுவதாக காட்டி படத்தை முடிக்காதது சோகமாக இருந்தாலும், தமிழ் சினிமா வளர்ந்துவருகிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துகாட்டு என்று எண்ணும் போது சந்தோஷமாகவே இருக்கிறது.
"Shawshank redemption" படத்தோட tag லைன் " Hope Is a Good Thing, Maybe the Best of Things, and No Good Thing Ever dies " இந்த படத்துக்கும் பொருந்தும். எப்படி இருந்தாலும் என்ன நடந்தாலும் வாழ்ந்து விடலாம் என்றநம்பிக்கையை ஊட்டும் படம் இது.
வெற்றி பெறுபவர்கள் மட்டுமே மதிக்கப்படும் இந்த உலகத்தில் ஒரு தோல்வி அடைந்தவனின் கதையைபடமாக்கி Cannes International Film Festival வரை கொண்டு சென்ற வசந்தபாலனுக்கு சோகத்தை திரையில்கொண்டு வரவைக்க யாரும் சொல்லி தர தேவையில்லை. ஆனாலும் 20 நிமிடத்திற்கு ஒரு முறை ஒருசோக சம்பவம் என்பது ரொம்பவே அதிகம். கதாபாத்திரங்கள் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலே ஏதோகெடுதல் நடக்க போகிறதாக நமக்கு தோணுவதை தடுக்க முடியவில்லை. என்னதான் படம் முழுக்கசோகமாக இருந்தாலும், இந்த சோகம் எனக்குள் வரவில்லை என்றுதான் சொல்லணும்.கதாபாத்திரங்களுக்காக நாம்
வருத்தப்பட்டாலும் சேது மாதிரி படங்களை பார்க்கும் போது நமக்குள் வரும் சோகம் இந்த படத்தில்வரவில்லை. எனக்கு வெயில் பார்க்கும் போதும் இது போல தான் தோணியது. இது இயக்குனரின்இயலாமையா இல்லை எனது பார்வையா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை இயக்குனர்இங்கே தோற்றுவிட்டார் என்று தான் சொல்வேன்.
தமிழ் சினிமா பற்றிய அனைத்து எண்ணங்களையும் ஓரங்கட்டி வைத்து விட்டு, இந்த படத்தை ஒரு முறைபார்த்தால் உலக திரைபட விழாக்களுக்காக எடுக்க பட்ட உலக தரத்தில் ஒரு தமிழ் சினிமா இது என்றுபுரியும். படத்தின் மேக்கிங், இசை மற்றும் படத்தில் உள்ள வண்ணங்கள் உங்களுக்கு ஒரு வித்தியாசமானஉண்மையான அனுபவத்தை கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது. ஒளிபதிவாளர் தனது பணியைசெவ்வனே செய்து உள்ளார். பல இடங்களில், "Hidden கேமரா" வோ என்று நம்மை சிந்திக்க வைப்பதிலேயேபுரிகிறது அவர் எவ்வளவு சிரமத்தை மேற்கொண்டிருப்பார் என்று..
அடுத்தமுறை நீங்க தி நகருக்கு போகும்போது கண்டிப்பா அந்த ரிமோட் கவர் விற்கும் வாலிபனையும்,அந்த பெரிய துணி கடைகளில் வேலை செய்யும் பெண்களையும் இன்னும் ஒரு தடவை திரும்பி பார்ப்பீங்கஇல்லையா? அது தான் இந்த படத்துக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி.
வித்தியாசமான கதை களத்திற்காகவும், கதாபாத்திரங்களுக்காகவும், பாடல்களுக்காகவும் அனைவரும்ஒரு முறையாவது கட்டாயம் பயணிக்க வேண்டிய தெரு இந்த அங்காடி தெரு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment